கள்ளகுறிச்சி : இலவச மரக்கன்றுகள் வாங்க வேளாண் துறை அழைப்பு
இலவச மரக்கன்றுகள் வேளாண் துறை அழைப்பு
வேளாண் துறை சார்ப்பில் இலவச மரகன்றுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாக சங்கராபுரம் வேளாண் உதவி இயக்குனர் புஷ்பராணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுற்றுப்புற சூழலை பாதுகாக்க நீடித்த நிலையான பசுமை போர்வைத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், விவசாயிகள் தங்கள் பட்டா நிலத்தில் வரப்பில் நடுவதற்கும், தோப்புகளாகவும் மரகன்றுகளை நடவு சய்யலாம். இதற்காக தேக்கு மரக்கன்றுகள் அரசு இலவசமாக வழங்குகிறது. விவசாயிகள் வயல் வரப்பில் நடவு செய்ய 2.5 ஏக்கருக்கு 160 மரக்கன்றுகள் வீதம் அதிக பட்சமாக 5 ஏக்கருக்கு 320 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும். தோப்பாக நடவு செய்ய 2.5 ஏக்கருக்கு 500 மரக்கன்றுகள் வரை அதிகபட்சமாக 1000 மரக்கன்றுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story