கருத்துக்கணிப்பில் குளறுபடி... கடுப்பில் அதிமுகவினர்!

கருத்துக்கணிப்பில் குளறுபடி... கடுப்பில் அதிமுகவினர்!

அதிமுக 

ஊதுகுழலான தொலைக்காட்சி! பாஜக வின் அச்சுறுத்தலா?

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களும் கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்ட மெகா கருத்துக்கணிப்பு தற்போது அதிமுகவினர் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வார இதழாக துவங்கி தற்போது தொலைக்காட்சி நிறுவனமாக உருவெடுத்து இருக்கும் இந்த தொலைக்காட்சி நிறுவனம், கூட்டணிக்காக கருத்துக்கணிப்பில் உண்மை தன்மை இல்லாமல் வெளியிட்டதாக அதிமுக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேலும் போலி கருத்துருவாக்கத்தை வெளியிட்ட நிறுவனம் மோசமான அரசியல் ஊதுகுழலாக தான் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது என அதிமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், "பத்திரிக்கைத் துறையில் ஒரு பெரிய மாற்றமாக உருவெடுத்து தொலைக்காட்சி நிறுவனமாக வளர்ந்து வரும் இந்த தனியார் நிறுவனம் உண்மைத்தன்மையுடன் நடுநிலையாக 'உண்மை உடனுக்குடன்' வழங்குவர் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் இன்றைக்கு அவர்கள் வெளியிட்டுள்ள போலி கருத்துருவாக்கம், மோசமான அரசியல் ஊதுகுழல் என்பதை நிரூபித்துள்ளது.

3 சதவீத வாக்கு வங்கிகள் மட்டுமே உள்ள பாஜக தங்கள் கூட்டணி கட்சி என்பதால், அதிமுக-வின் வாக்கு வங்கியை குறைத்துக் காட்ட முனைவது, குறைந்தபட்ச நேர்மையா, அடிப்படை ஊடக அறமோ அற்ற செயல். இந்த போலி கருத்துருவாக்கம் கூட்டணி தர்மத்திற்காக நிகழ்த்தப்பட்டதா அல்லது அரை நிர்வாண வீடியோ வெளியிடப்படுமென்று யாரேனும் மிரட்டியதால் நிகழ்த்தப்பட்ட ஒன்றா? எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி நிறுவனம் வைத்து பட்டதாரி மாணவர்களை உருவாக்கும் ஒருவர் நிர்வகிக்கும் தொலைக்காட்சி நிகழ்த்தும் அவருக்கும் அழகல்ல அவர் கல்லூரிக்கும் அழகல்ல என தெரிவித்தார்.

Tags

Next Story