.கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் .
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓ பன்னீர்செல்வம் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இலங்கை கடற்படையினர் ஐந்து படகுகளையும் மீனவர்களையும் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமநாதபுரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் குறி வைத்து கைது செய்யப்படுகிறார்கள் மீனவர்கள் தங்களது ஒரே தொழிலான மீன் பிடித்தல் தொழிலை செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது அவர்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். உடனடியாக கைது செய்யப்பட்ட 32 ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசிடம் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலும் ஈடுபடும் தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்பாக பேச வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Next Story