மயில் தோகை விரித்து ஆடிய அழகு: பொதுமக்கள் மகிழ்ச்சி



தூத்துக்குடி மாநகர பகுதியான தாமோதரன் நகர் பகுதியில் ஆண் மயில் ஒன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தோகை விரித்து ஆடியதை மக்கள் ரசித்தனர்.
தூத்துக்குடி மாநகர பகுதியான தாமோதரன் நகர் பகுதியில் ஆண் மயில் ஒன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தோகை விரித்து ஆடியதை மக்கள் ரசித்தனர்.
தூத்துக்குடி மாநகர பகுதியான தாமோதரன் நகர் பகுதிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் மயில் ஒன்று வந்துள்ளது இந்த மயில் அந்தப் பகுதி மக்களிடம் சகஜமாக பழகி அவர்கள் அளிக்கும் தானியங்களை உண்டு வந்துள்ளது இந்நிலையில் இன்று காலை ஆண் மயில் திடீரென தோகை விரித்து ஆட துவங்கியது சுமார் ஒரு மணி நேரமாக ஆண் மயில் தோகை விரித்து ஆடியது இந்த காணக் கிடைக்காத காட்சியை அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்ததுடன் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகள் ஆகியோர் தோகை விரித்து ஆடிய மயிலுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொண்டனர் மேலும் வைகாசி விசாகத் திருநாளான இன்று மயில் தோகை விரித்து ஆடியது முருக பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியதை இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மயிலை வழிபட்டு சென்றனர் வழக்கமாக காட்டுப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தான் மயில் தோகை விரித்து ஆடும் ஆனால் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள வாகனங்கள் நடமாட்டம் அதிகம் இருந்த தாமோதரன் நகர் பகுதியில் ஆண்மயில் சுமார் ஒரு மணி நேரம் தோகை விரித்து ஆடியதை பொது மக்கள் ஆச்சரியம் மற்றும் வியப்புடன் பார்த்து சென்றனர்.
Next Story



