வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு

வெள்ள பாதிப்பு 

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது மேலும் கோரம்பள்ளம் குளங்கள் உடைந்து, தூத்துக்குடி நகர் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்/ மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்கள் ஆங்காங்கே இரண்டு நாட்கள் கழித்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர். இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 42 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாதா நகரை சேர்ந்த அருணாசலம் மனைவி முத்துலட்சுமி (70), ஜேஜே நகரை சேர்ந்த சுடலை மகன் முருகேசன் (54), மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனி சண்முகம் என்பவரின் கோமதி (70), நாசரேத்தை சேர்ந்த தனபாலன் மகன் டேவிட்சன் (27) பத்மநாதன் மகன் முத்துலிங்கம் (22) ஆகிய 5பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story