முதலமைச்சர்களே போராடும் நிலைமைக்கு தள்ளும் மத்திய அரசு - கனிமொழி

பாஜக ஆளாத மாநிலங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததால் முதலமைச்சர்களே போராடும் நிலமைக்கும் மத்திய அரசு தள்ளிக்கொண்டிருக்கிறது என ஒசூரில் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதி மக்கள், இயக்கம், அமைப்புகளிடம் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பிற்கான கலந்துரையாடல், மனுக்களை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் பெற்றுக்கொண்டனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் கனிமொழி கருணாநிதி, மேயர் பிரியா, அப்துல்லா, கோவி செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இறுதியாக பேட்டியளித்த கனிமொழி கருணாநிதி: தொழிலாளர்கள், விவசாயிகள்,சிறு குறு தொழிற்சங்கங்களிடம் கலந்துரையாடினோம் தமிழக முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கையில் மனு அளித்திருக்கிறார்கள்.. இவற்றை பரிசீலித்து முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டு அறிக்கையாக வெளியிடப்பட உள்ளது முதல்வராக இருந்த மோடியின் நிலைப்பாடு, பிரதமரான பிறகு முற்றிலும் நிலைப்பாடிலிருந்து மாறுபட்டுள்ளது .

மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதை திமுக தலைவர் தான் அறிவிப்பார்.. 37 தொகுதிகளில் திமுக கூட்டணி என்கிற தேர்தல் கருத்துக்கணிப்பில் 37 மட்டுமல்ல தமிழகம், புதுவையில் என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் பாஜக ஆளாத மாநிலங்களுக்கு மத்திய அரசு போதுமான நிதியை வழங்கவில்லை மேற்கு வங்க முதல்வர் உண்ணாவிரதம் இருந்தார். கேரள முதல்வர் ஜந்தர்பந்தில் போராடுகிறார்.நாங்களும் தமிழகத்திற்கு போதுமான நிதி இல்லை என்று நாடாளுமன்றம் முன்பாக திமுக கூட்டணி கட்சிகள் போராடினோம் பாஜக ஆளாத மாநிலங்களில் நிதி குறைவாக ஒதுக்கிய மத்திய அரசால் மாநில முதல்வர்கள், மாநிலங்கள் போராடும் சூழலுக்கு மத்திய அரசு தள்ளிக்கொண்டிருக்கிறது என்றார்.

Tags

Next Story