சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும் - வேல்முருகன் வேண்டுகோள் !
வேல்முருகன்
ஏழு கோடி மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் சம வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம் கிடைக்க ஏதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். இந்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும்போதே சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தனித் தீர்மானித்தில் சொல்லப்பட்டிருந்தது.
அதன் பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்ததமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஏழு கோடி மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும். சட்டப்பேரவையில் எதிர்கட்சி என்ற முறையில் அதிமுக இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்றும் கேள்வி நேரத்திற்கு பிறகு நேரமில்லா நேரத்தில் கள்ளகுறிச்சி விவகாரம் குறித்து எவ்வளவு நேரம் வேண்டுமானலும் பேசி இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.