ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதல்வர் விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - அண்ணாமலை பேட்டி
அண்ணாமலை பேட்டி
தேச ஒற்றுமை தென்மண்டல மாநாட்டில் ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதல்வர் விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அண்ணாமலை பேட்டி.
தென்னிந்திய பார்வர்டு பிளாக் சார்பாக தேச ஒற்றுமை தென்மண்டல மாநாடு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா புழக்கம் அதிகமாகி இருக்கிறது குறிப்பாக சிந்தட்டிக் ட்ரக்ஸ் அதிகமாகிவிட்டது. டெல்லியில் 2000 கோடி போதை பொருள் கடத்தல் ஏற்பட்ட போது. அதன் தலைவராக திராவிட முன்னேற்ற கழகம் இருந்தவர்களில் ஒருவர் திமுக அமைப்பாளர் ஜாபர் சாதிக் முக்கிய குற்றவாளியாக உள்ள அவரது சகோதரர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியாக உள்ளார். இவரும் அந்த வழக்கில் ஒரு குற்றவாளி. இதில் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் தயாரிப்பாளராக இருந்திருக்கிறார், தமிழக டிஜிபி கேடயம் வழங்கி கௌரவித்துள்ளார். இந்த இடம் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது போல் தெரிகிறது. இன்னைக்கு அவசர அவசரமாக அவரை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு புறம் போதை பொருள் அதிகரித்திருப்பது மற்றொருபுறம் 2000 கோடி கஞ்சா மாட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், அதன் பின்னர் இது தொடர்பாக முதல்வர் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு பல்லடத்திற்கு வருகிறார். அனைவரும் ஆவலாக உள்ளோம் அதைத்தொடர்ந்து வருகிறார். அதை தொடர்ந்து சில முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார். யாத்திரை குறித்த கேள்விக்கு: நீங்கள் தான் சொல்ல வேண்டும். இது 2024 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல் மாற்றத்திற்கு அச்சாணியாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. விஜயதாரணியை தொடர்ந்து மற்ற கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் சேர்வார்களா என்ற கேள்விக்கு: நாளை மாலை 5 மணிக்கு முக்கிய பிரமுகர்கள் கட்சியில் சேர உள்ளார்கள். அதிமுகவில் பாஜகவினர் சேர்கிறார்கள் என இபிஎஸ் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு: தொண்டர்களை கஷ்டப்பட்டு இழுக்கிறார்கள். நாங்கள் முன்னாள் எம்எல்ஏக்கள் அமைச்சர்களை இழுக்கிறோம். அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகிவிட்டது என்று செல்லூர் ராஜு கூறியதற்கு குறித்த கேள்விக்கு: அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான் என செல்லு ராஜிடம் சொல்லுங்கள் அதை குறைப்பதற்கு ஏதாவது முயற்சி எடுக்க சொல்லுங்கள். மோடியா, எடப்பாடியா என பிரச்சாரம் மேற்கொள்வோம் என அதிமுகவினர் கூறியது குறித்த கேள்விக்கு: நான் சிரித்து விட்டேன் என்று சொல்லுங்கள். தொகுதி பங்கீடு திமுக முடித்தது குறித்த கேள்விக்கு: இன்று தொகுதி பங்கீடு முடிந்தால் நாளை தேர்தல் நடைபெற்று விடுமா. போட்டியில் இறுதியில் வெற்றி பெறுவது தான் முக்கியம் திமுக வாமப் செய்கிறார்கள் ஆனால் வெற்றி பெறுபவர்கள் அல்ல. பாஜக ஒரு கையில் நோட்டு பெட்டி; ஒரு கையில் ஓட்டுப்பெட்டி உள்ளது சீமான் கூறியது குறித்த கேள்விக்கு: நோட்டுப்பட்டி, ஒட்டி பெட்டி என இரண்டுக்கும் அவர் சுற்றுவதைப்போல் தெரிகிறது. அவரிடம் தான் தெளிவாக கேட்க வேண்டும். மத்திய அமைச்சர் நிதிக்குறிப்பு கேட்டதற்கு ஆணவத்துடன் பேசியது குறித்த கேள்விக்கு: பாசையும் அதே போல சில மனிதர்களுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும் போது பாஷையும் அதிகமாக தான் இருக்கும். மத்திய அமைச்சர் வார்த்தையில் எந்த தவறும் கிடையாது. தெர்மாகோல் விஞ்ஞானிகள் எல்லாம் எங்களுக்கு அட்வைஸ் செய்கிறார்கள். நாங்கள் தமிழக மக்களை பார்த்து பேசவில்லை, இதற்கு முன் இப்படி பேசியதில்லை பேச வேண்டிய கட்டாயம். மோசமான அரசியல் வாதிகளுக்கு அவர்களுடைய பாசையில் திருப்பிக் கொடுத்தால் தான் இந்த அரசியல் சாக்கடை மாறும் என்பதற்கு நானும் வந்துவிட்டேன். அவர்கள் பேசும் வார்த்தையில் தான் என்னுடைய பதிலும் இருக்கும். பாஜகவின் மூன்றாவது அணியாக ஓபிஎஸ் உள்ளாரா என்ற கேள்விக்கு: தமிழகம் இந்த சாக்கடை அரசியலில் இருந்து வெளியே வரவேண்டும் என்று நினைக்கிறோம் பொறுத்திருந்து பாருங்கள் ஒரு அமைப்பாக இன்னும் நான்கு ஐந்து நாட்களில் அமையும். விஜய் கட்சி துவங்கி இரண்டு கோடி தொண்டர்கள் சேற்பது குறித்த கேள்விக்கு: ஓட்டுநர் இருக்கையில் டிரைவர் அமர்ந்திருக்கும் போது அருகில் இருப்பவர் ஓட்ட சொல்லித் தரலாமா. அவர் வண்டியை அவர் ஓட்டுகிறார், என் வண்டியை நான் ஓட்டுகிறேன். தமிழகத்தில் திமுகவை நோக்கி பாஜகவின் பிரச்சாரம் எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கு: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. 2026 கான மாற்றம் 2024 இல் நடக்கும். தமிழகத்தில் ஒரே தேர்தல் நடக்கும். திமுக தனக்கான தன்மையை இழந்து விடும் அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் சும்மா ஆட்சியில் தான் இருப்பார்கள். டிஎம்கே பைல்ஸ் வெளியீடு குறித்த கேள்விக்கு: தேர்தலுக்கு இன்னும் 45 நாட்கள் உள்ளது. அரசியல் களம் தீ பிடிக்கத் துவங்கியுள்ளது. இன்றைக்கு டிவி சேனல் இன்றைக்கு டிவி சேனல்கள் தான் நாடகமாக உள்ளது. அடிப்படையில் நாங்கள் கொள்கை அடிப்படையில் செயல்படுகிறோம் நிச்சயமாக 45 நாட்களில் சூறாவளியாக இருக்கும். பாஜக அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்த அனைத்து உழைப்பையும் போட்டு உள்ளோம். நாளை மாலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் நடைபெறும் நிகழ்வைப் பாருங்கள். இந்தியா கூட்டணி குறித்த கேள்விக்கு: இந்தியா கூட்டணி உடைந்து போன ஒரு பொம்மை எனக் கூறினார்.
Next Story