அண்ணா, கலைஞர் நினைவிடங்களை திறந்து வைக்கும் முதல்வர்

அண்ணா, கலைஞர் நினைவிடங்களை திறந்து வைக்கும் முதல்வர்

கலைஞர் நினைவிடம் 

புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம், கலைஞர் கருணாநிதியின் புதிய நினைவிடம் ஆகியவற்றை நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை, கடற்கரை சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புதிய நினைவிடம் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது இந்நிலையில் "கலைஞர் உலகம்"(DIGITAL MUSEUM) அருங்காட்சியகம் திறக்க ஒரு வார காலம் வரை தாமதமாகலாம் என தமிழ்நாடு அரசு தகவல் மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக முன்பதிவு செய்ய ஏற்ற வகையில் இணையதளம் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி முன்பதிவு செய்தவர்கள் பார்வையிட உரிய நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story