வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு செய்யும் பணி தொடக்கம்!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு செய்யும் பணி தொடக்கம்!

தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு செய்யும் பணி அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடந்தது.

தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு செய்யும் பணி அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடந்தது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் VVPAT கருவிகள் ஆகியவற்றை முதற்கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி வேலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (20.03.2024) வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலெட்சுமி தலைமையில் நடந்தது.

அப்போது, 1561 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1561 கட்டுப்பாட்டு கருவிகள், 1692 VVPAT இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story