பறை இசைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்த ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் வளர்மதி
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் தமிழ்நாடு கலை பண்பாட்டு இயக்கம் மற்றும் இயல், இசை நாடகம் மன்றம் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழர் திருநாள் பொங்கல் விழாவை கொண்டாடும் கலைச் சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை போற்றும் வகையில் நலிந்த பாரம்பரிய கலையை முன்னேற்றம் அடைய செய்யும் வகையில் பறையாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம், கொக்கலிக்கட்டை, புலியாட்டம், வாளி மோட்சம், இசை நாடகம் உள்ளிட்ட பலவேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியர் வளர்மதி பறை இசையடித்து துவக்கி வைத்தார். முன்னதாக பாரம்பரிய கலைஞர்களால் மாவட்ட ஆட்சியர் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.. குறிப்பாக நாடக கலைஞர்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் பாரம்பரிய இசைக் கலைகளை நாம் கோர்த்து வகையில் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பதோடு மீண்டும் பாரம்பரிய தலையை இந்த சந்ததிக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அவர்களை உயர்த்த அவர்களோடு இணைந்திருப்போம் என பேசினார்.இந்த நிகழ்ச்சியில், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணை தலைவர் ரமேஷ் கர்ணா உட்பட தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்..
