நீட்தேர்வை கொண்டு வந்தது திமுக கூட்டணி அரசு: மா.பாண்டியராஜன்

நீட்தேர்வை கொண்டு வந்தது திமுக கூட்டணி அரசு: மா.பாண்டியராஜன்

மா.பாண்டியராஜன்


நீட் தேர்வை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு தான் என மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் உள்ள செய்தியாளர் மன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மாஃபா.பாண்டிய ராஜன் நீட் தேர்வை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு தான் என்றார். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் முதல் கையெழுத்தாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசியது அனைவரும் அறிந்ததே என்றார்.

ஆனால் தற்போது 200 வது கையெழுத்தும் வந்து விட்டது ஆனால் இன்னும் தமிழகத்தில் நீட் தேர்வை ஒழிக்க வில்லை என குற்றம் சாட்டினார். மேலும் தற்போது உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை எதிர்த்து போரிடுவோம் எனவும் தற்போது நீட் தேர்வு ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் நடத்துவது தான் நீட் தேர்வு ஒழிப்பு ரகசியம் இது தானா என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் விமர்சனம் செய்தார். மேலும் பேசியு மாஃபா.பாண்டிய ராஜன் நீட் தேர்வு ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தில் மக்கள் கையெழுத்து போட மாட்டார்கள் என்றார்.

நீட் தேர்வை எதிர்த்து திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் ஒரு நாடகம் எனவும் அதனை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார். நீட் தேர்வை எதிர்த்து திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் என்பது இளைஞர்களுக்கு செய்கிற மிகப்பெரிய துரோகம் என்றார். பேசிய மாஃபா.பாண்டிய ராஜன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் உடல் நலம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி விசாரித்ததில் எந்தவித அரசியலும் இல்லை என்றார். அதே சமயம் விடுதலைச் சிறுத்தை கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணையும் என எந்த இடத்திலும் அதிமுக தெரிவிக்கவில்லை எனவும் அதிமுக மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைக்கும் என தெரிவித்தார். மேலும் விசிக கட்சி அதிமுகவை எந்த ஒரு இடத்திலும் விமர்சனம் செய்ததில்லை எனவும் அதேபோல் அதிமுகவும் விசிக கட்சியை எந்த இடத்திலும் விமர்சனம் செய்தது இல்லை என்றார்.

அதே சமயம் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது போது விசிக கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகி வரவேற்று அறிக்கை வெளியிட்டது உண்மை என்றார். மேலும் திமுக கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றார். மேலும் வரும் காலங்களில் அதிமுக கூட்டணியில் மிகப்பெரிய மாற்றங்கள் வரும் என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story