அணைக்கட்டு புராதன வரலாற்று சிதைவுகளை ஆவணப்படுத்த வேண்டும்

அணைக்கட்டு புராதன வரலாற்று சிதைவுகளை ஆவணப்படுத்த வேண்டும்

கல்மேடு அணைக்கட்டு பகுதியில் காணப்படும் புராதன வரலாற்று சிதைவுகளை ஆவணப்படுத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.


கல்மேடு அணைக்கட்டு பகுதியில் காணப்படும் புராதன வரலாற்று சிதைவுகளை ஆவணப்படுத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்மேடு அணைக்கட்டு பகுதியில் காணப்படும் புராதன வரலாற்று சிதைவுகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "நான் எனது ‘கீழபட்டிணம்’ (எ) ‘கயல் பட்டிணம்’ தொடர்பான தொடர் கள ஆய்வின் போது நேற்று 16.05.2024 மாலை 5மணி அளவில் வடக்கு கல்மேடு பகுதியில் சர்வே எண் 399/5ல் காணப்பட்ட தொன்மையான ஸ்ரீ பெருமாள் ஆலயத்தினை ஆய்வு செய்ததில் நான் 17-18ம் நூற்றாண்டினை சேர்ந்த கல்வெட்டு மற்றும் குறியீடு இருப்பதை கண்டறிந்து அவைகளை ஆவணப்படுத்தும் விதமாக அவ்வூரினை சேர்ந்த முத்துராஜ் மற்றும் மாடசாமி ஆகியோரது துணையோடு சுத்தம் செய்து கல்வெட்டினை புகைப்பட படிகம் எடுத்துக் கொண்டேன். இதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள எனது மனைவியின் குல தெய்வமான கல்லாத்து அய்யன் கோவில் பகுதியில் கல்லாறு அணையினை பலப்படுத்தி புனரமைக்கும் பணியானது பொதுப்பணித்துறை மூலமாக நடை பெறுவதை அறிந்து பார்வையிட சென்றதில் பழைய அணைக்கட்டினை சுற்றி சுமார் 10 அடி ஆழத்திற்கு மண் அள்ளப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்தது.

அதில் மேல்புறம் பகுதியின் தெற்கு பகுதியில் சுமார் 200 அடி நீளத்திற்கு பழங்கால கற்களால் ஆன சிற்பங்களோடு கூடிய கட்டுமானங்கள் 6 – 10 அடி ஆழத்தில் காணப்படுகின்றன. இத்தகைய வரலாற்று சிதைவுகளை முறையாக தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி இந்த பகுதியின் வரலாற்று உண்மைகளை வெளி கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தூத்துக்குடி பொதுப்பணித்துறை செயல்பொறியாளர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Tags

Next Story