செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்..! நீதிபதி கொடுத்த ஷாக்!

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்..! நீதிபதி கொடுத்த ஷாக்!

செந்தில்பாலாஜி


பண மோசடி மீதான வழக்கில் செந்தில் பாலாஜியின் மீதான மனு மீண்டும் நாளை விசாரணைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக 3000 பக்கங்களுடன் கூடிய குற்ற பத்திரிக்கையை அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்தனர்.

11 மாதங்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில்,"320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். வழக்கில் தாமதம் ஏற்படுத்த வேண்டும் என்றே கடைசி நேரத்தில் அமலாக்கத்துறை பதில் மனுவை தாக்கல் செய்திருக்கிறது" என்று கூறியது.

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, தாமதமாக பதிலளித்ததற்கு மன்னிப்பு கோரியது.

இதனை அடுத்து கடந்த மே 6ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கை ஒத்தி வைக்க கூடாது என வாதிடப்பட்டது.

இருப்பினும் அமலாக்கத் துறையின் எதிர்வாதத்தால் இந்த வழக்கு மே 15ஆம் தேதி அதாவது இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

மே 18ஆம் தேதியில் இருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை என்பதால் மே 15ஆம் தேதி நிவாரணம் கிடைக்க வேண்டும் இல்லை என்றால் ஜாமின்கிடைக்காது பிறகு ஒன்றரை மாதம் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில்பாலாஜி மனு விசாரிக்கப்பட்டது.

விசாரணையின் போது அமலாக்கத்துறை சார்பில் அவகாசம் கோரப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜி தரப்பில், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் 300 நாட்களுக்கு மேல் அவர் சிறையில் உள்ளார் என வாதிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் 300 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு காரணமாக பொருட்படுத்த முடியாது என்று கூறி அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று இந்த விசாரணையை நாளை மே 16 க்கு ஒத்தி வைத்துள்ளார்.

Tags

Next Story