சாமானியன் பார்க்க வந்தவர்களை ரோஜா கொடுத்த ரசிகர்கள்

சாமானியன் பார்க்க வந்தவர்களை ரோஜா கொடுத்த ரசிகர்கள்
X

சாமானியன் பார்க்க வந்தவர்களை ரோஜா கொடுத்த ரசிகர்கள்

தூத்துக்குடியில் சாமானியன் திரைப்படம் பார்க்க வந்த மக்களை ராமராஜன் நற்பணி மன்றத்தினர் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.
தூத்துக்குடி பெரிசன் பிளாசா திரையரங்கில் ராமராஜன் நீண்ட காலங்களுக்கு பிறகு நடித்த சாமானியன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில், படத்தை காண வருகை தந்த பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட, மாநகர மக்கள் நாயகன் ராமராஜன் தலைமை நற்பணி மன்றம் சார்பாக மாவட்ட பொறுப்பாளர் காங்கிரஸ் எடிசன் தலைமையில் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். இதில், மாவட்ட தலைவர் ஆறுமுகச்சாமி. மாவட்ட செயலாளர் வேலுமணி, மாநகர மாவட்ட தலைவர் பாலசங்கர், துணை தலைவர் வினோத், செயலாளர் மரியா ஆல்வின், பொதுச்செயலாளர் கணேசன், பொருளாளர் ராகுல்கிங், செயற்குழு உறுப்பினர் டார்வின் போஸ்கோ, மாவட்ட செயலாளர் சுரேஸ் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story