பறவைகள் கணக்கெடுப்பு விவரம்!

பறவைகள் கணக்கெடுப்பு விவரம்!

பறவைகள் கணக்கெடுப்பு

நிலப் பறவைகள் கணக்கெடுப்பு விவரங்களை வரும் 7ம் தேதி தமிழக வனத்துறை வெளியிடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 2,3 ஆகிய இரண்டு நாள்கள் நடந்தது. இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நீலகிரி வனக்கோட்டம், கூடலூர் வனக் கோட்டம் , முதுமலை புலிகள் காப்பகம் என மாவட்டம் முழுவதும் உள்ள வனப்பகுதிகள் நடந்தது. கடந்த 2ம் தேதி ஊட்டி கேர்ன் ஹில் சூழல் சுற்றுலா மையத்தில் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் ஆகியோருக்கு நிலப்பறவைகள் கணக்கெடுப்பில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து நிலப் பறவைகள் கணக்கெடுப்பு பணி அன்று மாலையும் மறுநாள் காலையும் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் 25 குழுவினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ள பறவையினங்கள் குறித்து அதற்கான மென்பொருளில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலப் பறவைகள் கணக்கெடுப்பின் விவரங்களை தமிழக வனத்துறை வரும் மார்ச்7ம் தேதி வெளியிடவுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story