ஜெயங்கொண்டம்: மனைவிக்கு கோயில் கட்டிய கணவன்

ஜெயங்கொண்டம் அருகே தாஜ்மகாலுக்கு நிகராக இறந்த மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த கணரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.இவர் திருப்பூரில் பனியன் உற்பத்தி செய்யும் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.

இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கற்பகவள்ளி என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கோமகன் என்ற 5 வயது மகன் உள்ளார். இந்நிலையில் கற்பகவள்ளிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கிட்னி செயலிழப்பு காரணமாக 2023 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அப்பொழுது கோபாலகிருஷ்ணன் என்னால் உன்னை காப்பாற்ற முடியாவிட்டால் உனக்காக கோயில் கட்டி ஊரையே உன்னை சாமியாக கும்பிட வைப்பேன் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஓராண்டுகள் முடிவுற்ற நிலையில் கற்பகவள்ளி புதைக்கப்பட்ட சொந்த இடத்தில் அவரது உருவப்படம் வைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார் கற்பகவள்ளி கணவன் கோபாலகிருஷ்ணன். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாய்மொழியாக கோவில் கட்டுவேன் என்று படங்களில் வருவது போல் இல்லாமல் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில் கட்டி செய்கையில் செய்து காண்பித்துள்ளார் கோபாலகிருஷ்ணன். இச்செயல் பல்வேறு தம்பதியினருக்கு உதாரணமாக விளங்குகின்றார்.

Tags

Read MoreRead Less
Next Story