மோடி என்ற பிம்பம் உடைத்தெறியப்படும் - செல்வப்பெருந்தகை

தமிழ் நாட்டு மண் சமூக நீதிக்கான மண் என்பதால், இங்கு ஒருபோதும் மோடிக்கும், பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துக்கும் இடமில்லை. தமிழ்நாட்டு மக்கள் மோடிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக வாக்களிக்க எழுச்சியுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, இந்தத் தேர்தலில் மோடியின் பிம்பம் தகர்த்து எறியப்படும். மோடி மக்களுக்கான பிரதமர் இல்லை. ஒரு சாராருக்குதான் அவர் பிரதமராக இருக்கிறார் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

தஞ்சாவூர் கீழவாசல் காமரா ஜர் சிலை அருகே திமுக வேட்பாளர் ச.முரசொலிக்கு ஆதரவாக புதன்கிழமை பிற்பகல் பிரசாரம் செய்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: மோடி தோற்கடிக்க முடியாத தலைவர் இல்லை. அப்படிப்பட்ட வாஜ்பாயே இந்தியா ஜொலிக்கிறது என 2004-ஆம் ஆண்டு தேர்தலில் கூறினார். ஆனால், இந்தியா 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ஜொலித்தது. சோனியா தலைமையிலான கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்தனர். இதேபோல, இந்தத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களிக்க 100 சதவீத மக்களும் முடிவு செய்துவிட்டனர்.

மோடியின் சர்வாதிகார, கொடுங்கோல் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர். தமிழ் நாட்டு மண் சமூக நீதிக்கான மண் என்பதால், இங்கு ஒருபோதும் மோடிக்கும், பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துக்கும் இடமில்லை. தமிழ்நாட்டு மக்கள் மோடிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக வாக்களிக்க எழுச்சியுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, இந்தத் தேர்தலில் மோடியின் பிம்பம் தகர்த்து எறியப்படும். மோடி மக்களுக்கான பிரதமர் இல்லை. ஒரு சாராருக்குதான் அவர் பிரதமராக இருக்கிறார். வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ மோடிக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. சர்வாதிகாரம் வீழ்த்தப்படும் என்றார் செல்வப்பெருந்தகை.

முன்னதாக, பிரசாரத்தில் அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் மோடி, தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித் யதார். இதற்கு துணை போனவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக வும், பாஜகவும் தொடர்ந்து தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்கின்றன. பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைப்பேன் எனக் கூறிவிட்டு, விலைவாசி உயர்வை மோடி அர சால்கட்டுப்படுத்தமுடியவில்லை. இந்திய மக்களுக்கு மோடி துரோகம் செய்து வருகிறார் என்றார் செல்வப்பெருந்தகை.

Tags

Next Story