தென்மாவட்ட கல்வி வளர்ச்சியில் சிறுபான்மையினர் பள்ளிகள் முக்கியத்துவம்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தென் மாவட்டங்களில் கல்வியின் வளர்ச்சியில் சிறுபான்மையினர் பள்ளிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தென் மாவட்டங்களில் கல்வியின் வளர்ச்சியில் சிறுபான்மையினர் பள்ளிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர். -அமைச்சர் அன்பின் மகேஷ் பேச்சு அரசு பள்ளி கல்வி துறை சார்பாக தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா மதுரை விரகனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்பேற்று 400க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிடுகையில்: தனியார் பள்ளிகள் வந்து அரசு பள்ளிகளில் என்ன செய்கிறோம் என்று பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் அதைப்போல நாங்களும் தனியார் பள்ளிகளை பார்த்து கற்றுக் கொள்கிறோம். தென் மாவட்டங்களில் கல்வியின் வளர்ச்சியில் சிறுபான்மையினர் பள்ளிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர். அரசு மற்றும் தனியார் நிறுவன கூட்டணிக்கு முன்னுதாரனமாக இருக்க வேண்டும் என்பதற்கு தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். தனியார் பள்ளிகளில் தமிழை தவிர்த்து விடக் கூடாது என்பதற்காகத்தான் கடந்த ஆண்டு தனியார் பள்ளி தமிழ் ஆசிரியர்களுக்கு ஒரு புத்தாக்க வகுப்பு நடத்தினோம். பெற்றோர், ஆசிரியர் சங்கத்திற்கான முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
Next Story