வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
Delhi Rain
வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே பல மாவட்டங்களிலும் மழைப்பொழிவு காணப்படுகிறது. மேலும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நாடு முழுவதிலும் இருந்து முழுமையாக விலகியது. தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகா, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அக்.15-ம் தேதி தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31-ம் தேதி வரை தொடரும். வடகிழக்கு பருவமழையின் தொடக்கமே அதிரடியாக உள்ளதால் கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.