"ஒரே நாளில் சரிந்த இந்திய பங்குச் சந்தை".. எலன் மாஸ்க்கை வம்புக்கிழுத்த செல்வப் பெருந்தகை!
செல்வப் பெருந்தகை
சென்னையில் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பாஜக ஆட்சி மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் , "வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் ஏறக்குறைய 7.6 லட்சம் கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை விற்று வருகின்றனர். இதற்கு காரணம் மோடி அரசு மிகப் பெரிய தோல்வியை தழுவ போகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது. கொடுத்த வாக்குறுதியின் இது நம்பிக்கை இல்லாமல் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை விற்று வருகின்றனர். இது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே எலன் மாஸ்க் முதலீடு செய்வதற்காக திட்டம் தீட்டி கொடுத்த நிகழ்ச்சி செய்து தேர்தலுக்குப் பின் வருகிறேன் என்று கூறிவிட்டார். ஐநா சபை போன்ற உலக நாடுகள் எல்லாம் மோடி அரசை கண்டித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு இப்படி ஒரு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது." என பேசினார்.