2ஜி வழக்கின் தீர்ப்பு விரைவில் வரலாம் !

2ஜி வழக்கின் தீர்ப்பு விரைவில் வரலாம் !

2 ஜி வழக்கின் தீர்ப்பு விரைவில் வரலாம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஊட்டியில் தெரிவித்தார்.


2 ஜி வழக்கின் தீர்ப்பு விரைவில் வரலாம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஊட்டியில் தெரிவித்தார்.

நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகன் நிருபர்களிடம் பேசுகையில், " "2 ஜி"யா, மோடி ஜி யா என்றால் மக்கள் மோடி ஜி பக்கம் தான் இருப்பார்கள். 2 ஜி வழக்கை உயர் நீதிமன்றம் மறு விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த விசாரணையின் மீது தீர்ப்பு விரைவில் கூட வரலாம். இது ஜனநாயக நாடு, இங்கு வாக்குக்கு மதிப்பில்லை என்றும், வாக்காளர்கள் நியாயமாக வாக்களிக்க வேண்டும். மனசாட்சியோடு வாக்களிக்க வேண்டும். நாங்கள் பணத்தை நம்புவதில்லை, ஆனால் 2ஜி ஊழல் செய்த கட்சி வேண்டுமானால் பணத்தின் மீது நம்பிக்கை வைத்து வரலாம், " என்றார்.

மேலும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான திட்டங்கள் குறித்து அவர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து வரும் மனித விலங்குகள் மோதலுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தொழில் வளர்ச்சி அடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிரதமர் மோடி தலைமையிலான பத்தாண்டு கால ஆட்சியில் சுற்றுலாவிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அதன் அடிப்படையில் ஊட்டியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ஊட்டியை சுற்றுலா மேம்பாட்டு இடமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். நிலச்சரிவுகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story