அடுத்த 2- மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

அடுத்த 2- மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று அடுத்த இரண்டு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் தான் கோடை வெயில் தொடங்கும் ஆனால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் வெயில் தொடங்கி விட்டது. மார்ச்சில் ஏற்றம் கண்ட வெயில் ஏப்ரலில் உச்சத்தை தொட்டது.

தமிழகத்தில் பரவலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகி இருந்தது. குறிப்பாக ஈரோடு, கோவை, கரூர் என கொங்கு மாவட்டங்கள் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்கள் வேலூர், திருப்பத்தூர் ,திருத்தணி என மாவட்டங்களில் வெயில் 15 டிகிரி அதிகமாகவே பதிவு இருந்தது. இந்த நிலையில் தற்போது கோடை மழை தொடங்கி இருக்கிறது.

100 டிகிரி தாண்டி வெயில் பதிவான நிலையில் அப்பகுதியில் மழை புரட்டி எடுத்தது. ஏற்காடு, ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த மழை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் தான் சென்னையில் அதிக மழை பொழிவிருக்கும் ஆனால் சென்னையில் இன்று காலை தொடங்கி மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை ,கன்னியாகுமரி ராமநாதபுரம், புதுக்கோட்டை ,நாகை மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை மழை பெய்யும் என்று தெரிவித்திருக்கிறது.

Tags

Next Story