சவுக்கு சங்கருக்கு போட்ட அடுத்த ஸ்கெட்ச்.. மீண்டும் பாய்ந்த வழக்கு!
சவுக்கு சங்கர்
பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது மீண்டும் ஒரு வழக்கில் கைதாகியுள்ளார்.
மேலும், அவரை நேர்காணல் செய்த பெலிக்ஸ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரையும் கைது செய்தனர். தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.
சைபர் கிரைம் காவல்துறையின் ஒருநாள் காவல் முடிந்த நிலையில் சவுக்கு சங்கர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனைத்தொடர்ந்து பெண் காவலர்கள் பற்றி அவதூறு பரப்பியதாக கைதான வழக்கில் சவுக்கு சங்கருக்கு மே 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை 4 ஆவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெலிக்ஸின் யூடியூப் சேனலில், முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.