நீலகிரியில் நோட்டா வாக்கு எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட குறைந்தது

நீலகிரியில் நோட்டா வாக்கு எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட குறைந்தது

நீலகிரி நாடாளுமன்றத் (தனி) தொகுதியில் கடந்த தேர்தல்களை விட நோட்டா வாக்குகள் குறைந்துள்ளது.


நீலகிரி நாடாளுமன்றத் (தனி) தொகுதியில் கடந்த தேர்தல்களை விட நோட்டா வாக்குகள் குறைந்துள்ளது.

தேர்தல்களில் பொதுவாக எந்த வேட்பாளரும் பிடிக்காத நிலை இருந்தால், பொதுமக்கள் ஓட்டளிக்காமல் தேர்தலை புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அதிருப்தி உள்ளவர்களும் தங்களது வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நோட்டா பதிவு கொண்டு வரப்பட்டது. இதன்படி எந்த வாக்காளரும் பிடிக்கவில்லை என்று நோட்டாவில் பதிவு செய்யலாம். நீலகிரி தொகுதியை பொருத்தவரை 2014 -ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 46,559 நோட்டா வாக்குகள் பதிவாகியது. அந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 5 சதவீதமாகவும், மூன்றாவது இடத்தையும் நோட்டா பிடித்திருந்தது.

இதைத்தொடர்ந்து 2019 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் 18,149 வாக்குகள் நோட்டாவில் பதிவகின. இந்நிலையில் இந்த தேர்தலில் அதை விட குறைவாக 13,000 வாக்குகள் மட்டுமே நோட்டாவில் பதிவாகியுள்ளது. நோட்டாவில் இவ்வாறு வாக்குகள் குறைய காரணம் என்ன என்பது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், "இந்தியாவில் நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களின் போது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க விருப்பம் இல்லாவிட்டால் வாக்காளர்கள் நோட்டோ எனும் பட்டனை அழுத்தி ஓட்டு செலுத்தலாம். இந்த நடைமுறை இந்தியாவில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் மட்டும் இடம்பெறும். உள்ளாட்சி தேர்தல் நடைமுறையில் இது பின்பற்றப்படாது.

நோட்டாவுக்கு வாக்களிப்பதால் எந்த கட்சிக்கும் பயனில்லாமல் போவதைவிட இருக்கிற கட்சிகளில் ஓரளவு நல்ல வேட்பாளர் பயன்பெறட்டும் என்ற எண்ணம் நிறைய பேரிடம் ஏற்பட்டு விட்டது. மேலும் ஆரம்பத்தில் ஒரு வேட்பாளர் மீது அதிருப்தி இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அவர் மீது இருக்கும் அதிருப்தி குறைந்திருக்கலாம். மேலும் நோட்டாவுக்கு வாக்களிப்பது, ஓட்டுகளை வீணாக்குவதற்கு சமம் என்ற எண்ணம் தற்போது ஏற்பட்டுள்ளது," என்றனர்.

Tags

Next Story