இன்ஜினில் சிக்கிய முதியவர் - கடவுளாக வந்து காப்பாற்றிய ரயில் பைலட்

திருப்பூர் ரயில் நிலையம் அருகே முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடப்பதை பார்த்து எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தியதுடன் ரயிலை ரிவர்ஸ் எடுத்து உயிரை காப்பாற்றிய பைலட்டுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் ரயில் நிலையத்துக்கு இன்று மதியம் 3.27 மணி அளவில் ஜெய்ப்பூரில் இருந்து கோவை செல்கின்ற எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த ரயில் திருப்பூரில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிய போது, திருப்பூர் கள்ளம்பாலையம் அருகே திடீரென்று முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடந்துள்ளார். அதை பார்த்து சுதாரித்த ரயில் பைலட் உடனடியாக எமர்ஜென்சி பிரேக் செய்தார். ஆனாலும் ரயில் அந்த முதியவரை தாண்டி சென்று தான் நின்றது.

இதில் அந்த முதியவர் ரயில் இன்ஜினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். இறங்கி வந்து பார்த்த ரயில் பைலட் மற்றும் ரயில் ஊழியர்கள் ரயிலை ரிவர்சில் இயக்கி அந்த முதியவரை மீட்டனர். ரயிலை பார்த்ததும் உடனடியாக தண்டவாளத்தில் படுத்து கொண்டதால் அந்த முதியவர் சிறிய காயங்களுடன் தப்பினார். தண்டவாளத்தை கடந்த முதியவருக்காக எக்ஸ்பிரஸ் ரயில் உடனடியாக நிறுத்தி தாதர்ரியமாக செயல்பட்ட ரயில்வே பைலட்டுகள் இருவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.

Tags

Next Story