என் மீதான பயத்தில் தான் ஒரே கட்ட தேர்தல் - சீமான்

பிகார், அஸ்சாம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்ட தேர்தல் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரு கட்ட தேர்தல். காரணம் சீமானை பார்த்து பயம். சீமான் கட்சி இல்லை என்றால் ராஜீவ் கொலையாளிகள் விடுதலையாகி இருக்க மாட்டர்கள் என ராசிபுரத்தில் நடந்த பிரசாரத்தின் போது சீமான் பேசினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கா கனிமொழியை ஆதரித்து சீமான் பரப்புரையில் ஈடுபட்டார்.

அவர் பேசுகையில்: 40 தொகுதிகளில் உள்ள தமிழ்நாட்டுக்கு ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்துவது நாம் தமிழர் கட்சி செய்துள்ள பயமே. மோடி கூறியது போல் கருப்பு பணத்தை ஒழித்து இருந்தால் எதற்கு இத்தனை இடி ரைடு, வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்படுகிறது . தற்போது பாஜக சார்பில் நாமக்கல்லில் நிறுத்தப்பட்டுள்ள கே பி ராமலிங்கம் பதவிக்காக கட்சித் தாவுகிறார், அவர் எந்த கட்சியில் இல்லாமல் இருக்கிறார் என விமர்சனம் செய்தார்.

வாகனம் வாங்கும் போதே சாலை வரி கட்டி வாங்கப்பட்ட பின்பு எதற்கு சுங்க சாவடி, என கேள்வி எழுப்பினார். திமுகவும் அதிமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் தொடர்ந்து இந்த நாட்டை ஆண்டு என்ன முன்னேற்றம் கண்டது ? இந்தக் கட்சிகள் எதுவும் தமிழ்நாட்டிற்கு முன்னேற்றத்தை தரவில்லை இந்த சனியங்களை விட்டு விட்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் என விமர்சித்தார். என்னை நம்பி 32 லட்சம் பேர் நம்பி வாக்களித்தனர் அவர்களுக்கு நன்றியுடன் இருக்கிறேன். ஒவ்வொருவரும் நான் காசு வாங்கி வாக்களிக்க மாட்டேன் என உறுதி எடுக்க வேண்டும் ஒரு நொடியில் மாற்றம் வரும்.

பணம் செல்லாது என்றார்கள் ஊழல் லஞ்சம் கருப்பு பணம் ஒழிந்ததா ஒழியவில்லை. 10 ஆண்டு காங்கிரஸ் 10 ஆண்டு பாஜக ஆண்டது எதுவும் சரியில்லை நீட் தேர்வை, அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் நடத்தி வருகிறது. பிகார் அஸ்சாம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்ட தேர்தல் ஆனால் தமிழகத்தில் மட்டும் 1 கட்ட தேர்தல் காரணம் சீமானை பார்த்து பயம். சீமான் கட்சி இல்லை என்றால் ராஜீவ் கொலையாளிகள் விடுதலையாகி இருக்க மாட்டர்கள்.

நான் பழனி பாபா வழியில் வந்தவன் பயப்படாமல் போராடுபவன். மருத்துவர்கள் பேராசிரியர் எல்லாம் வந்து வேட்பாளராக நிற்கிறார்கள். ஒருவாய்ப்பு கொடுத்து எங்களை வெற்றி பெற செய்யுங்கள். அப்போது தான் தெரியும் எங்களின் திறமையும், எனக் கூறி ஆதரவாக திறந்த வெளி வாகனத்தில் நாமக்கல் பாராளுமன்ற வேட்பாளர் கா கனிமொழிக்கு பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ,தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story