விருப்பப்பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயம்.. அடுத்த கல்வியாண்டு முதல் அமலாகிறது.
பள்ளிக்கல்வித்துறை அரசானை
10ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பப்பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயம்.. பள்ளிக்கல்வித்துறை அரசானை
தமிழை தாய்மொழியாக கொண்டு, விருப்பப்பாடம் தேர்வு செய்யாத 10ம் வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதும். தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ளாத மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்துடன் விருப்பப்பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட விருப்பப்பாடங்களில் பெறும் மதிப்பெண்களும் சான்றிதழில் இடம்பெறும். 2024-25ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த உத்தரவு.
Next Story