தங்கம் விலை! பொதுமக்களுக்கு நிம்மதி பெருமூச்சு!

தங்கம் விலை! பொதுமக்களுக்கு நிம்மதி பெருமூச்சு!

 தங்கம் விலை

கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.2000 விலை குறைந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.

மே மாதம் 20ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.6,690க்கும், சவரன் ரூ.55,200க்கும் விற்பனையாகி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.2000 விலை குறைந்து பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 25) இன்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,240-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,655-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை இன்று (மே 25 ) 1 கிராம் ரூ.50 காசுகள் குறைந்து ரூ.96.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.96,000-க்கும் விற்பனையாகிறது.

Tags

Next Story