தங்கம் விலை ஒரே ஆண்டில் ரூ.13,200 வரை அதிகரிப்பு!!

தங்கம் விலை ஒரே ஆண்டில் ரூ.13,200 வரை அதிகரிப்பு!!
X

Gold

2025ம் ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று பவுன் ரூ.60,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. 2025ம் ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை ரூ.60 ஆயிரத்தை கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. நேற்று முன்தினம் ரூ.60,200க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரண தங்கம் ஜெட் வேகத்தில் உயர்ந்து, நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.60,440க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,555-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடந்த சில நாட்களாக வெள்ளியில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.105க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,05,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, தங்கத்தின் மீதான கடுமையான விலை உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் செய்வதறியாது தவிக்கும் நிலையும், புதிதாக நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் கடும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தற்போது வரை (390 நாட்கள்) சவரனுக்கு ரூ.13,200 வரை தங்கத்தின் விலை உயர்ந்து இருப்பதாகவும், இன்னும் இந்தாண்டு இறுதிக்குள் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை எட்டும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபரணம் கடந்து வந்த பாதை

தேதி வருடம் விலை

அக்.10 2008 ரூ.10,272

ஆக.18 2011 ரூ.20,032

ஜன.03 2020 ரூ.30,344

ஜூலை.27 2020 ரூ.40,104

மார்ச்.28 2024 ரூ.50,012

ஜன.22 2025 ரூ.60,200

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை

தேதி விலை

19-01-2025 பவுன் ரூ.59,480

20-01-2025 பவுன் ரூ.59,600

21-01-2025 பவுன் ரூ.59,600

22-01-2025 பவுன் ரூ.60,200

23-01-2025 பவுன் ரூ.60,200

Tags

Next Story