சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனை!!
தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி கடந்த பட்ஜெட்டில் 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தங்கம் விலை சரிவடைந்தது. 2 மாதங்களுக்கும் மேலாக விலை குறைந்திருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் பவுன் ரூ.55 ஆயிரத்தை எட்டுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.54,800-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.96-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story