தங்கம் விலைக்கு உயரப்போகும் தக்காளி விலை!

தங்கம் விலைக்கு உயரப்போகும் தக்காளி விலை!

தக்காளி விலை!

சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தைக்கு வழக்கமாக 700 முதல் 800 லாரிகளில் சுமாா் 7,000 முதல் 8,000 டன் காய்கறிகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக 5000 டன் காய்கறிகள் மட்டுமே கொண்டு வரப்படுகின்றன. வரத்து குறைவால் காய்கறிகளின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை உயா்ந்தது.

இந்த விலை உயர்வு ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்றும், அதன்பிறகு படிப்படியாக விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிகிறது.

அந்த வகையில், கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையான தக்காளி, இன்று கிலோவுக்க ரூ.60 விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வு 10 நாட்கள் வரை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story