விருதுநகர்:உளுந்தம் பருப்பு விலை உயர்வு,துவரை,பாமாயில் விலை சரிவு
உளுந்தம் பருப்பு
விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடலை எண்ணெய் 15 கிலோ கடந்த வாரம் ரூ.3ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.20 குறைந்துள்ளது. எனவே, ரூ.2980க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாமாயில் 15கிலோ கடந்த வாரம் ரூ.1360க்கு விற்ற நிலையில் இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.20 குறைந்துள்ளது. எனவே, ரூ1340க்கு விற்பனையாகிறது. துவரம் பருப்பு 100 கிலோ புதுஸ் நாடு வகை ரூ.16,500க்கு விற்கப்பட்ட நிலையில் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 மட்டும் குறைந்துள்ளது. எனவே, குவிண்டால் ஒன்று ரூ.16,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாசிப்பருப்பு 100 கிலோ ரூ.10,500க்கு விற்பனையாகி வந்த நிலையில், இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 குறைந்துள்ளது. எனவே, இந்த வாரம் மூட்டை ஒன்று ரூ.10,300க்கு விற்பனையாகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு வகையானது ரூ.13ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 வரை உயர்த்தப்பட்டு, தற்போது, ரூ.13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. உளுந்து லையன் வகையானது 100 கிலோ ரூ.10ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.900 வரை உயர்த்தப்பட்டு ரூ.10,900க்கு விற்கப்படுகிறது. பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.