”நகருக்குள் வனம்‘ என்ற திட்டம் - மேயர் துவக்கி வைத்தார்
சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் நகருக்குள் வனம்‘ என்ற திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடும் விழாவை மேயர் துவக்கி வைத்தார்
சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் நகருக்குள் வனம்‘ என்ற திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடும் விழாவை மேயர் துவக்கி வைத்தார்
சேலம் மாநகராட்சி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து அஸ்தம்பட்டி மண்டலத்தில் 1,000 மரக்கன்றுகள் நடுவதற் கான தொடக்க விழா அஸ்தம் பட்டி மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் மேயர் ராமச்சந்திரன் பேசும்போது, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாநகராட்சிக்கு சொந்தமான பயன்படுத்தப் படாத காலி இடங்களில் மரக்கன்றுகள் நட்டு ‘நகருக்குள் வனம்‘ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து நிலை அலுவலக வளாகங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பூங்காக்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகங்கள், நுண்ணுயிர் உரம் தயாரிப்பு வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் வேம்பு, புங்கன், நாவல், மாதுளை, பூவரசு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது என்றார். இதில் துணை மேயர் சாரதாதேவி, அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமா ராணி, உதவி ஆணையாளர் சிந்துஜா, கவுன்சிலர் ராஜ்குமார் , யூனியன் பேங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் சத்தியபான் பெகரா, பிராந்திய மேலாளர் செல்லதுரை, உதவி பொது மேலாளர் பிரின்ஸ், கலா, சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story