பகிரங்க மன்னிப்பு கேட்ட ரெட் பிக்ஸ் நிறுவனம்!

பகிரங்க மன்னிப்பு கேட்ட ரெட் பிக்ஸ் நிறுவனம்!

சவுக்கு சங்கர் - ரெட் பிக்ஸ்

சவுக்கு சங்கர் பேசிய பெண் காவலர்களின் மனதை புண்படுத்தும் படியான வீடியோவை ஒளிப்பரப்பியதற்காக ரெட் பிக்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

"கடந்த 30.04.2024 அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் ரெட் பிக்ஸ் ஊடகத்தின் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார். சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் ரெட் பிக்ஸ்-க்கு உடன்பாடு இல்லை. அது ரெட் பிக்சின் கருத்தும் இல்லை. இருப்பினும், அந்த காணொளியால் காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்து இருப்பதால் ரெட் பிக்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது." என்று ரெட் பிக்ஸ் ஊடகத்தின் பொது மேலாளரும், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவியுமான ஜேன் ஃபெலிக்ஸ் கூறியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story