அரசு அறிவித்துள்ள ரூ.6 ஆயிரம் நிதி போதுமானது அல்ல : அன்புமணி ராமதாஸ்

அரசு அறிவித்துள்ள ரூ.6 ஆயிரம் நிதி போதுமானது அல்ல : அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்  

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள்கள் தங்கியிருந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 

தூத்துக்குடி அண்ணா நகா் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்கினாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக அரசு தற்போது வெள்ள நிவாரண பணிகளை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் வேகமாக செய்யவேண்டும். தமிழக முதல்வா் தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை நேரில் வந்து பாா்வையிட்டாா். ஆனால் அவா் இங்கேயே 2 நாள்கள் தங்கியிருந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். தூத்துக்குடி நகரத்தில் பல பகுதிகளில் மழை நீா் வடியவில்லை.

மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.6 ஆயிரம் போதுமானது அல்ல. அவா்களுக்கு முதல் தவணையாக ரூ. 10 ஆயிரம், இரண்டாவது தவணையாக ரூ. 10 ஆயிரம், மூன்றாவது தவணையாக ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நெல், வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகி உள்ளன. அவா்களுக்கெல்லாம் அரசு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். உடனடி தேவைகள், இடைக்கால தேவைகள், நீண்ட கால தேவைகள் இதை அரசு செய்ய வேண்டும் என்றாா். அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சின்னத்துரை, வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் மாநகர, பகுதி, ஒன்றிய பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story