முருகன் உள்ளிட்டவர்களுக்கு இலங்கை அரசு பாஸ்போர்ட் வழங்கியுள்ளது
நளினி
விசாவுக்கு அனுமதி கோரி முருகன் தொடர்ந்த வழக்கில் இலங்கை தூதரகம் அவர்களுக்கு பாஸ்போர்ட்டு வழங்கி உள்ளது
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்துள்ள முருகன்,ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கான பாஸ்போர்ட்டை இலங்கை துணை தூதரகம் வழங்கியுள்ளது.
மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதிக்கோரி மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்தவுடன் ஒரு வாரத்தில் மூவரும் இலங்கை அனுப்பப்படுவார்கள் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. விசாவுக்கு விண்ணப்பிக்க அடையாள அட்டைக்கோரி முருகன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
Next Story