சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு

சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு
X

Registration Department

மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், நிதியாண்டின் இறுதி மாதம் என்பதாலும் மார்ச் 2025 மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக அனைத்து பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10.00 மணி முதல் ஆவண பதிவு முடியும்வரை செயல்படும். அதன்படி இன்று முதல் மார்ச் மாதத்தின் 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வரும் 5 சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடும் நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story