தமிழ்நாடு பாடத்திட்டத்தில் திராவிட இயக்கங்கள் பாடங்கள் தான் உள்ளது - சர்ச்சையை துவங்கிய ஆளுநர்

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் திராவிட இயக்கங்கள் பாடங்கள் தான் உள்ளது - சர்ச்சையை துவங்கிய ஆளுநர்

ஆளுநர் ஆர்.என்.ரவி

கோவையில் அகில பாரதிய ராஷ்ட்ரிய சாக்ஷிக் மாகாஷங் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் சார்பில் ‘புதிய பாரதத்தில் கல்வி சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. இந்நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், ''தமிழ்நாடு பாடத்திட்டத்தில், தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய பாடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் பற்றிய மிகைப்படுத்துதலும், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களும் தான் உள்ளது.

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகிறது.

கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு, மார்க்சிய சிந்தனை உட்பட பல சிந்தனைகள் தடையாக உள்ளன .'' என சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

Tags

Next Story