தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர் கூட்டமைப்பினர்
மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 1.1.24 முதல் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கி உத்தரவிட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் , மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு 1.7.23 முதல் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி அறிவித்துள்ளமைக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நன்றி தெரிவித்து உள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள பணிக்கொடை உயர்வு, வீட்டு வாடகைப்படி உயர்வு உள்ளிட்ட சலுகைகளுடன் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பினையும் தமிழக அரசு வழங்கிட வேண்டுமென தெரிவித்துள்னர். மேலும் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் ஒற்றை நம்பிக்கையான திராவிட மாடல் அரசு, *ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான பழைய ஓய்வூதிய திட்டத்தையும், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பழைய முறையிலான ஊக்க ஊதிய உயர்வும் வழங்கிட ஆவண செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.