புதிய வாகன சட்டம் அமல்படுத்த வேண்டும் என போக்குவரத்து துறை திட்டம் !!

புதிய வாகன சட்டம் அமல்படுத்த வேண்டும் என போக்குவரத்து துறை திட்டம் !!

புதிய வாகன சட்டம்

சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் வாகன பதிவு ரத்து செய்யப்படுவதுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மகாராஷ்டிராவில் சமீபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் மது போதையில் சொகுசு காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதால் ஐடி ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.

இது போன்ற சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவதால் உயிர் சேதம் ஏற்படுகிறது. இதனால் விலைமதிப்பில்லாத உயிர்களும் பலியாவதை தடுக்க தமிழ்நாடு போக்குவரத்து துறையும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. புதிய வாகன சட்டத்தை வருகின்ற ஜூன் 1ஆம் தேதி அமல்படுத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தமிழக போக்குவரத்து அதிகாரிகள் கூறுவது தமிழ்நாட்டில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டு விபத்து ஏற்பட்டால் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ரூபாய் 25,000 அபராதமும் மூன்று மாதம் சிறை தண்டனையும் விதிக்க புதிய வாகன சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் வாகனம் ஓட்டிய சிறுவனுக்கு ரூபாய் 25,000 அபராதமும் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது. இதே போல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும்.

மேலும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துகளில் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு இழப்பீடு தொகையும் வழங்கப்படும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் நபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக ரூபாய் 2 லட்சம் வழங்கப்பட உள்ளது. அதேபோல பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

பாதிக்கப்படும் நபர்கள் ஆர்டிஓ அல்லது தாசில்தாரிடம் விண்ணப்பித்தால் அது குறித்து ஒரு மாதம் விசாரிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பின்னர் 15 நாட்களில் உரிய அனுமதி பெற்று பொது காப்பீடு சபையில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு மாவட்டம் நீதிபதி அல்லது மாவட்ட கலெக்டர் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story