4 முனை போட்டியால் திருச்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது
திருச்சி 4 முனை போட்டி நிலவுவதால் தேர்தல் களம் பரபரப்பாக மாறி இருக்கிறது. இதனால் இங்கு போட்டி கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., பா. ஜனதா கூட்டணியில் அ.ம.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மோதுகின்றன. ம.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மக' னும், கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.அ.தி.மு.க.சார்பில் அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கருப்பையா களமிறக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு போராட் டத்தின் போது நாயகனாக வர்ணிக்கப்பட்ட ராஜேஷ் களம் காண்கிறார். 3 வேட்பாளர்களுமே தேர்தல்களத்துக்கு புதியவர்கள். அ.ம.மு.க. சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் அல்லது மாநில அமைப்பு செயலாள ரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமானுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே தேர்தல் களத்தை சந்தித்தவர்கள் ஆவர்.
Next Story