சிவகாசியில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்....
விருதுநகர் மாவட்டம், தேர்தல் என்றாலே,கட்சியினர் முதல் கடைக்கோடி தொண்டன் வரை கரைவேட்டி,கட்சிக்கொடி, சின்னம் என எல்லாம் அமர்களப்படும்.மேலும் பிரசாரத்திற்கு தேவையான துண்டு பிரசுரம் முதல் சுவரொட்டிகள்,பேனர்கள் அச்சிடும்பணி"குட்டி ஜப்பான் "என்று அழைக்கப்படும் சிவகாசியில் தற்போது அரசியல் கட்சிகளின் பிளக்ஸ்,தொப்பி மற்றும் சின்னங்கள் பொறித்த அட்டை மற்றும் பிளாடிக் மாஸ்க் உள்ளிட்டவைகளை அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதன்படி பாஜக, காங்கிரஸ்,அதிமுக,திமுக,பாமக உள்ளிட்ட கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சிகளின் வரவேற்பு பேனர்கள், கட்சிகொடிகள்,சின்னம், தோரணங்கள்,துண்டு,தொப்பி ஆகியவை என அந்தந்த கட்சிகளின் வண்ணங்களின் அச்சிட்டு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் துணிகளை வைத்து தயாரிப்பதுதான் சிறப்பு அம்சமாகும்.
மேலும் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா,புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து ஆர்டர் வருகின்றன.தேர்தல்களத்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஒரு படி முன்னேற்றம் அடையும் என்றும் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.