அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி

அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி

அதிமுக பூத் கமிட்டி

அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மரக்காணம் அருகே கீழ்பேட்டை ஊராட்சியில் பூத் கமிட்டி அமைத்தல் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மகளிர் அணி அமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்.பி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- எல்லா கட்சிகளிலும் பூத் கமிட்டி அமைக்கும்போது அந்த பூத் கமிட்டியில் கிளை செயலாளர் அவரது மனைவி அவரது குடும்பத்தார் மட்டுமே இடம்பெற்று இருப்பார்கள், இந்த தவறு நடைபெறக் கூடாது அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும், மேலும் அதிகபட்ச வாக்காளர்கள் பெண்கள் தான், எனவே அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால்தான் இந்தியாவிலேயே 50 சதவீத இடத்தை பெண்களுக்கு ஒதுக்கிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான், இந்தியாவில் பல வருடங்களாக ஆட்சி செய்து வரும் கட்சியும் தற்போது ஒன்பது வருடமாக ஆட்சி நடத்தி வரும் பாஜகவும் பெண்களுக்கு சம இட ஒதுக்கீடு வழங்கவில்லை ஆனால் தற்போது மட்டும் கண்டறிந்து பெண்களுக்காக இட ஒதுக்கீடு செய்துள்ளார்கள் காரணம் தேர்தல், அதுவும் சட்டமாக இயற்றி உள்ளார்கள் அதை அமல்படுத்துவதற்கு பத்தாண்டு காலமாகும், பெண்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் ஆதரவு இல்லாமல் குறிப்பாக இளைஞர்களின் ஆதரவு இல்லாமல் அரசியல் நடத்த முடியாது வெற்றி பெறவும் முடியாது, எனவே ஆட்சியிலும் கட்சியிலும் நிர்வாகத்திலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் கட்சியின் பேச்சாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார், மேலும் வீட்டிற்கு எப்படி கடக்கால் அத்தியாவசியமோ அதே போன்று கட்சிக்கு பூத் கமிட்டி மிகவும் அவசியமானது, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் முதலமைச்சராக இருந்தாலும் பூத் கமிட்டி சரியில்லை என்றால் தேர்தலில் வெற்றி பெற முடியாது, அரசியலில் வரவேண்டும் ஒன்றிய செயலராக வேண்டும் நகர செயலாளர் ஆக வேண்டும் அமைச்சராக வேண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றால், முதலில் கட்சியில் பூத் கமிட்டியில் இணைந்து கட்சி பணியாற்றி தங்கள் பகுதியில் உள்ள மக்களிடையே பிரபலமாக வேண்டும், தமிழ்நாட்டில் ஒரே கட்சி 20 வருடமாக கொள்ளை அடித்துக் கொண்டுள்ளது அதுவும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்துக் கொண்டுள்ளார்கள், கருணாநிதி எங்கிருந்து வந்தார் திருவாரூரில் டிக்கெட் வாங்குவதற்கு காசு இல்லாமல் அவரும் கண்ணதாசனும் வந்தார் இதை நாங்கள் சொல்லவில்லை கண்ணதாசனே கூறினார், அப்படி வந்த குடும்பம் இன்று ஏசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்களாக உள்ளார்கள், முதலில் திமுகவில் கருணாநிதி முதலமைச்சர் அதன் பிறகு அவருடைய மகன் ஸ்டாலின் முதலமைச்சர் அதன் பிறகு அவருடைய மகன் உதயநிதி முதலமைச்சர், வேர்வை சிந்தி நயன்தாராவுடன் பாடுபட்டு கட்சியை வளர்க்க பாடுபட்டவர் உதயநிதி அதிமுக துவங்கி 51 ஆண்டு காலங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது இதில் 32 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட கட்சி அதிமுக, இந்த கட்சியில் ஏதாவது குடும்ப அரசியல் உள்ளதா எம்ஜிஆர்க்கு பிறகு ஜானகி அந்த கட்சி வேண்டும் என்று கூறினார்கள் ஆனால் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜெயலலிதா அம்மாவை தேர்ந்தெடுத்தார்கள் இதுதான் அதிமுக, ஜெயலலிதா அம்மா இறந்த பிறகு கட்சி போய்விட்டது என்று பலரும் கூறினார்கள் ஆனால் கட்சியில் சாதாரண தொண்டனாக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று கட்சியில் பொதுச் செயலாளராக உள்ளார், அதேபோன்று யார் வேண்டுமானாலும் அதிமுகவில் எந்த பொறுப்புக்கு வேண்டுமானாலும் வரலாம், அதற்கு கட்சிக்கு உண்மையாக உழைக்க வேண்டும். இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகியோர் தான் கட்சியை பயன்படுத்த வேண்டும் அதற்கான வாய்ப்பைத் தான் நாங்கள் பூத் கமிட்டி மூலமாக உருவாக்கிக் கொடுக்கிறோம். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தைரியமாக உற்சாகமாக செயல்படுங்கள் பெண்களுக்கு என்றும் பாதுகாப்பான இயக்கம் அதிமுக எனவே பெண்களும் சிறப்பாக பணியாற்றலாம் உள்ளிட்ட ஆலோசனைகளை மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அர்ஜுனன், சக்கரபாணி விழுப்புரம் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பாலமுருகன், மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன், மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் அணி செயலாளர் பாண்டுரங்கன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் துரைராஜ், ஒன்றிய அவைத் தலைவர் கோவிந்து, விவசாய அணி ஒன்றிய செயலாளர் டி.எஸ்.எஸ் சேகர், கிளைசெயலாளர்கள் குனசேகர், திருநாவுக்கரசு, சீனுவாசன், இளவரசன், இளைஞர் பாசறை செயலாளர் லட்சியவேந்தன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பூத் கமிட்டி கமிட்டி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story