தேனி : சவுக்கு சங்கர் உட்பட 3 பேர் மீது கஞ்சா வழக்கு
காவல் நிலையம்
சவுக்கு சங்கரின் காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து சவுக்கு சங்கர் உட்பட 3 பேர் மீது பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
தேனியில் நேற்று கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் சவுக்கு சங்கரை கைது செய்த போது அவருடன் இருந்த இருவரை விசாரித்ததில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. சவுக்கு சங்கரின் காரை ஆய்வு செய்த போது காரில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story