தேனி இப்போது அமமுகவின் கோட்டையாக உள்ளது - டி டி வி தினகரன்.

தேனி இப்போது அமமுகவின் கோட்டையாக உள்ளது - டி டி வி தினகரன்.

அதிமுகவின் தொகுதியாக இருந்த தேனி இப்போது அமமுகவின் கோட்டையாக உள்ளது, என்று அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், வாக்கு செலுத்திய பின் பேட்டி அளித்தார்.


அதிமுகவின் தொகுதியாக இருந்த தேனி இப்போது அமமுகவின் கோட்டையாக உள்ளது, என்று அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், வாக்கு செலுத்திய பின் பேட்டி அளித்தார்.

சென்னை அடையார் பகுதியில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் தேனி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி வேட்பாளரும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மனைவி அனுராதா மற்றும் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்த வந்தார், உடன் அமமுக துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் இருந்தார்.

தனது ஜனநாயக கடமையை ஆற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், குடும்பத்தினருடன் வந்து வாக்களித்து விட்டோம். தேனி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, உறுதியாக நான் வெற்றி பெறுவேன். தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியைப் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதால் தேர்தல் புறக்கணிப்பு செய்கிறார்கள், பணம் கொடுப்பதை தேர்தல் அதிகாரிகள் தடுக்காமல் இருப்பது நடைமுறை குறித்தும் பல இடங்களில் அதிருப்தி உள்ளது.

அம்மா இருந்த வரை (மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை) அதிமுகவின் தொகுதியாக இருந்த தேனி இப்போது அமமுகவின் கோட்டையாக உள்ளது. தமிழக மக்கள் 100 சதவிகிதம் ஜனநாயக கடமை தான் பாஜக வெற்றி பெற்ற மோடி மீண்டும் பிரதமராக முடியும். தமிழக மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது தெரியும் மோடி வந்தால் தான் வளர்ச்சி இருக்கும் என்றார்.

Tags

Next Story