விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை.. யாருக்கும் ஆதரவும் இல்லை..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை.. யாருக்கும் ஆதரவும் இல்லை..!

விஜய்

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் என மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலைப் புறக்கணித்துவிட்டது. அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் விலகிவிட்டது.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என தமிழக வெற்றிக் வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story