கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சம் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சம் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்

கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, கொரோனா பாதிப்பு குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூபாய் 6.74 கோடி மதிப்புள்ள அதிநவீன இருதய கேத் லேப் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஜீன் 15ம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

6 மாதங்களில் அசுர வேகத்தில் வளர்ந்து அடைந்து உள்ளது. கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையில் நாள்தோறும் 800-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உள் நோயாளிகளாக 160 லிருந்து 200 பேர் வகையிலும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரை 687 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த மருத்துவமனை திறந்த வைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரையிலும் 88, 589 பேர் புறநானிகளாக சிகிச்சை பெற்று இருக்கிறார்கள்.

Tags

Next Story