பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : கனிமொழி

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : கனிமொழி

கனிமொழி எம்.பி பிரச்சாரம் 

நம் பிள்ளைகள், நம் பெண்கள், நம் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் மீண்டும் பாஜக ஆட்சி வரக் கூடாது என திமுக வேட்பாளர் கனிமொழி பேசினார்.

மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்திய கூட்டணியின் சார்பில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது கனிமொழி கருணாநிதி பேசும்போது, "கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் உங்களை சந்தித்த முதலமைச்சர் அண்ணன் தளபதி, தான் அளித்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றியிருக்கிறார். பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று தேர்தலில் வாக்குறுதியளித்தார். வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்தே விடியல் இலவச பயணம்தான்.

அதேபோல மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்று வாக்குறுதி அளித்தார். இப்போது ஒரு கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை வழங்கி வருகிறார். இப்போது மோடி அரசு நமது தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்காத காரணத்தால்தான் அனைத்து மகளிருக்கும் வழங்க முடியாத ஒரு நிலை இருக்கிறது. ஒன்றியத்தில் நம் ஆட்சி இந்தியா கூட்டணி ஆட்சி வந்தவுடனே, தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கும். அதன் பின் மீதி இருக்கிற அத்தனை சகோதரிகளுக்கும் வரவேண்டிய மகளிர் உரிமைத் தொகை கண்டிப்பாக வந்து சேரும். பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நம் பிள்ளைகள், நம் பெண்கள், நம் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் மீண்டும் பாஜக ஆட்சி வரக் கூடாது.என்றார்

Tags

Next Story