ஊட்டிக்கு மூன்றாவது மாற்றுப்பாதை

ஊட்டிக்கு மூன்றாவது மாற்றுப்பாதை

ஊட்டிக்கு ரூ. 40 கோடி மதிப்பில் மூன்றாவது மாற்றுப்பாதைக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.


ஊட்டிக்கு ரூ. 40 கோடி மதிப்பில் மூன்றாவது மாற்றுப்பாதைக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் ஊட்டிக்கு வர குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலையில் பயன்படுத்தி வருகின்றனர். சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மூன்றாவது மாற்றுப்பாதையை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலுத்து வருகிறது.

இந்நிலையில் ஊட்டி அருகே உள்ள காந்திபேட்டை பகுதியிலிருந்து மேட்டுப்பாளையம், கோவை செல்ல மூன்றாவது மாற்று பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. 80 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த சாலை திறக்கப்படவுள்ளது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூருக்கு செல்லாமல் நேரடியாக காட்டோரி சந்திப்பில் இருந்து 20 கி.மீ., தூர பயணத்தில் ஊட்டியை அடையும் வகையில் ரூ. 40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

குன்னூர் மலைப்பாதையில் வரும் வாகனங்கள் காட்டேரி, சேலாஸ், கெந்தலா , கேத்தி பாலடா, கொல்லிமலை, காந்தி பேட்டை வழியாக ஊட்டியை வந்தடையலாம். சாலை பணிகள் நிறைவடைந்தால் சமவெளி பகுதியில் இருந்து பல வாகனங்கள் குன்னூர் செல்லாமல் ஊட்டிக்கு வர முடியும். இதனால் பல இடங்களில் வாகன நெரிசலை தவிர்க்க முடியும். இப்ப பணிகளை விரைவில் முடித்து இரண்டாம் சீசனுக்குள் சமவெளி பகுதியிலிருந்து வரும் வாகனங்களை இந்த வழியாக அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை பாதையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக இந்த மூன்றாவது மாற்று பாதை அமையும் என உள்ளூர் வாசிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story